ஞாயிறு, 21 நவம்பர், 2010

காலங்கள் தானாய் கடந்து போகும்!!!

அடியே!!! உன் விழிகளின் ஓரப் பார்வை ஒன்று மட்டும் போதுமடி எனக்கு... காலங்கள் தானாய் கடந்து போகும்...

செவ்வாய், 16 நவம்பர், 2010

விளைவுகள் என்னவோ ஒன்று தான்!!!

புயலிற்க்குப் பிறகு நீண்ட அமைதி.... பெண்ணின் கோவத்திற்குப் பிறகு நீண்ட மௌனம்.... விளைவுகள் என்னவோ ஒன்று தான்!!!

திங்கள், 15 நவம்பர், 2010

நேற்று.. இன்று.. நாளை..

நேற்றை யோசித்து, நாளையைத் தேடி, இன்று வாழ மறந்து விடுகிறோம்....

புதன், 10 நவம்பர், 2010

என் மனம்....

சமயங்களில் உன் வார்த்தைகள் எதுவும் காதில் விழுவதில்லை... உன் கண்ணின் அழகில் மயங்கி காற்றில் பறந்து கொண்டிருகிறது என் மனம்....

திங்கள், 8 நவம்பர், 2010

கவிதைகள் சொல்லுகிறதடி...

அடிப்பெண்ணே.... உந்தன் காதணிகளும் கவிதைகள் சொல்லுகிறதடி...

புதன், 3 நவம்பர், 2010

தந்திடுமா???

பாவாடை தாவணி தந்த அழகை, ஜீன்சும், டிஷர்டும் தான் தந்திடுமா???

செவ்வாய், 2 நவம்பர், 2010

மொழியறிய....

மௌனத்தின் மொழியறிய .... காதலித்துப்பாருங்கள்....

உதாரணம்!!!

அழகுக்கு உதாரணம் - தமிழும், தமிழ்ப்பெண்ணும்.....

இழந்தேன்!!!!

எப்பொழுது உன்னிடம் எதிர்பார்க்க ஆரம்பித்தேனோ... அப்பொழுது நான் உன்னை இழந்தேன்...
எப்பொழுது உன்னிடம் எதிர்பார்க்க மறந்தேனோ...அப்பொழுது என்னை இழந்தேன் உன்னிடம்...