திங்கள், 19 மே, 2025

என்னை மட்டும் தேடிய கண்கள்!!!

 என்னை மட்டும் தேடிய கண்கள்...

இன்று...

என்னை காண மறுத்து...

எங்கெங்கோ யார் யாரிடமோ என்னை தேடி அலைகிறது...

வெள்ளி, 31 மே, 2024

மூன்று வார்த்தை!!!

 மூன்று வார்த்தை கவிதை சொல்லிய என் முதல் கவிதையே!!!

நீ தான்!!!

நீ தான், நீ மட்டும் தான், என்றுமே!!!

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

மின்னல்களை காணவில்லை...

இன்றும் மழை பெய்கிறது. ஆனால் மின்னல்களை காணவில்லை...
இன்று உன் உதடுகள் என் உதடுகளின் அருகில் இல்லாத காரணத்தினாலோ என்னவோ??  

வெள்ளி, 25 ஜனவரி, 2013

Onnum Puriyala song lyrics in Tamil

ஒன்னும் புரியல.. சொல்லத் தெரியல..
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே.......
உச்சந் தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே.......

நெத்தி பொட்டுத் தெறிக்குது விட்டு விட்டு
ரெக்க மொழைக்குது
நெஞ்சுக் குழி அடிக்குது மானே.........
மனம் கொத்தி தாவியே
தறிகெட்டு ஓடுதே
உயிர் உன்ன சேரவே
ஒரு திட்டம் ஓடுது.....

ஒன்னும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே......

அலையுர பேயா.... அவளது பார்வை
என்ன தாக்குது... வந்து என்ன தாக்குது...
பரவுர நோயா அவளது வாசம்...
என்ன வாட்டுது... நின்னு என்ன வாட்டுது...
அவளது திருமேனி... வெறி கூட்டுது...
அவளிடம் அடிவாங்க வழி காட்டுது ....
அவ என்ன பேசுவா அத எண்ணத் தோனுது...
அவ எங்க தூங்குவா அத கண்ணும் தேடுது...


ஒன்னும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே......

கதிர் அருவாளா மனசையும் கீறி
துண்டு போடுறா... என்ன துண்டு போடுறா...
கலவர ஊரா... அவ ஒரு உருமாறி...
குண்டு போடுறா... செல்ல குண்டு போடுறா ....
விழியில பல நூறு படம் காட்டுறா.....
அறுபது நிலவாக ஒலிக்கூட்டுறா .....
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தி ஆடுது..
அவ எட்டிப் போனதும் அட புத்தி மாறுது....



ஒன்னும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல..............




ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

தென்றலின் அருமை...

என் மேல் பட்ட உன் தலைமுடி உணர்த்திச் சென்றது,  தென்றலின் அருமையை....

காணவில்லை....

தமிழ் கவிதை எழுதலாம் என்றால், இங்கே தமிழ் பெண்களை காணவில்லை....

செவ்வாய், 6 டிசம்பர், 2011

பிரகாசம்

என்றுமன்றி இன்று மட்டும் ஏன் இந்த பிரகாசம்...
உன் நெற்றிச் சந்தனத்திற்கு...
என் இதயத்தின் நன்றிகள்...

கோபம் எனக்கு

கருணைக்குப்  பெண்ணை மட்டும் எடுத்துக்கட்டாக சொல்லுபவர்களின் மேல்  கோபம் எனக்கு...
உன் கண்களால் என்னை வதைப்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்!!!

சனி, 2 ஜூலை, 2011

நீ ஒருத்தி மட்டுமே...

என்னைப் பெற்றெடுத்தவளுக்கு அடுத்து எனக்காகப் பிறந்தவள் நீ ஒருத்தி மட்டுமே...

ஞாயிறு, 26 ஜூன், 2011

மழையாய் பெய்கிறது!!!

நீ அருகில் இருக்கும் தருணம் கவிதை மழையாய் பெய்கிறது..
நீ அருகில் இல்லாத தருணம் கண்ணீர்  மழையாய் பெய்கிறது...

சனி, 23 ஏப்ரல், 2011

திருடியது!!!

என் இதயத்தை திருடியது உன் கண்கள் மட்டும் தான் என்று எண்ணியிருந்தேன்.. இல்லை உன் புருவங்களும் தான்...

வியாழன், 21 ஏப்ரல், 2011

சொல்லிவிட்டுச் சென்றது..

காற்றில் பறந்து என் மேல் பட்ட உன் தாவணி சொல்லிவிட்டுச் சென்றது.. என்னை உனக்கு பிடிக்கும் என்று....

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

புன்னகையில்!!!

உன் இதழோரப் புன்னகையில் இடரி விழுந்தேனடி...

சனி, 19 பிப்ரவரி, 2011

விதைத்து....

விழிகளால் விதைத்துச் சென்றாள் காதலை.....

புதன், 2 பிப்ரவரி, 2011

அனுமதி.....

உன் மூக்குத்தியின் ஒளிக்கு மட்டுமே நம் முதலிரவில் அனுமதி..

தொலைத்துவிட்டேனடி...

உன் சிரிப்பிற்கு மயங்கி என் சிரிப்பை தொலைத்துவிட்டேனடி

சனி, 29 ஜனவரி, 2011

நரகம், சொர்க்கம்.....

வாழத் தெரியாதவனுக்கு சொர்க்கம் கூட நரகம் தான்..
வாழத் தெரிந்தவனுக்கு நரகம் கூட சொர்க்கம் தான்...

புதன், 26 ஜனவரி, 2011

அடம்பிடிக்கிறது...

என் பேனா முள் அடம்பிடிக்கிறது, உன்னைத் தவிர வேற யாரைப் பற்றியும் எழுதுவதில்லை என்று......

புதன், 19 ஜனவரி, 2011

ரத்த நாளங்களில்...

உன் நினைவுகள் என் ரத்த நாளங்களில்...