செவ்வாய், 6 டிசம்பர், 2011

பிரகாசம்

என்றுமன்றி இன்று மட்டும் ஏன் இந்த பிரகாசம்...
உன் நெற்றிச் சந்தனத்திற்கு...
என் இதயத்தின் நன்றிகள்...

கோபம் எனக்கு

கருணைக்குப்  பெண்ணை மட்டும் எடுத்துக்கட்டாக சொல்லுபவர்களின் மேல்  கோபம் எனக்கு...
உன் கண்களால் என்னை வதைப்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்!!!

சனி, 2 ஜூலை, 2011

நீ ஒருத்தி மட்டுமே...

என்னைப் பெற்றெடுத்தவளுக்கு அடுத்து எனக்காகப் பிறந்தவள் நீ ஒருத்தி மட்டுமே...

ஞாயிறு, 26 ஜூன், 2011

மழையாய் பெய்கிறது!!!

நீ அருகில் இருக்கும் தருணம் கவிதை மழையாய் பெய்கிறது..
நீ அருகில் இல்லாத தருணம் கண்ணீர்  மழையாய் பெய்கிறது...

சனி, 23 ஏப்ரல், 2011

திருடியது!!!

என் இதயத்தை திருடியது உன் கண்கள் மட்டும் தான் என்று எண்ணியிருந்தேன்.. இல்லை உன் புருவங்களும் தான்...

வியாழன், 21 ஏப்ரல், 2011

சொல்லிவிட்டுச் சென்றது..

காற்றில் பறந்து என் மேல் பட்ட உன் தாவணி சொல்லிவிட்டுச் சென்றது.. என்னை உனக்கு பிடிக்கும் என்று....

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

புன்னகையில்!!!

உன் இதழோரப் புன்னகையில் இடரி விழுந்தேனடி...

சனி, 19 பிப்ரவரி, 2011

விதைத்து....

விழிகளால் விதைத்துச் சென்றாள் காதலை.....

புதன், 2 பிப்ரவரி, 2011

அனுமதி.....

உன் மூக்குத்தியின் ஒளிக்கு மட்டுமே நம் முதலிரவில் அனுமதி..

தொலைத்துவிட்டேனடி...

உன் சிரிப்பிற்கு மயங்கி என் சிரிப்பை தொலைத்துவிட்டேனடி

சனி, 29 ஜனவரி, 2011

நரகம், சொர்க்கம்.....

வாழத் தெரியாதவனுக்கு சொர்க்கம் கூட நரகம் தான்..
வாழத் தெரிந்தவனுக்கு நரகம் கூட சொர்க்கம் தான்...

புதன், 26 ஜனவரி, 2011

அடம்பிடிக்கிறது...

என் பேனா முள் அடம்பிடிக்கிறது, உன்னைத் தவிர வேற யாரைப் பற்றியும் எழுதுவதில்லை என்று......

புதன், 19 ஜனவரி, 2011

ரத்த நாளங்களில்...

உன் நினைவுகள் என் ரத்த நாளங்களில்...

வியாழன், 6 ஜனவரி, 2011

தற்கொலை....

என் கோபங்கள் தற்கொலை செய்து கொண்டன, அந்த குழந்தையின் புன்சிரிப்பைக் கண்ட நொடியில்...