கருவறையிலிருந்து கூக்குரலோடு இந்த உலகத்தின் மடியில் ஒரு ஜீவன் விழும்போது இந்த பயணம் ஆரம்பிக்கிறது
ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009
கல்லூரி வாழ்க்கை
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து ஒன்றாய் கூடிய பறவைகள் நாங்கள். எல்லைக் கோடில்லா சுதந்திரம் இங்கே இந்த வானத்தில். பாடத்தை விட வாழ்க்கையும், நட்பின் இலக்கணமும் கற்றோம் இந்த வகுப்பறை என்ற வானத்தில். குரும்புத்தனத்தின் மொத்த அடையாளம், குட்டி சுவற்றில் கழிந்த நேரங்கள், அரட்டையில் கழிந்த இரவுகள், உறக்கத்தில் கழிந்த வகுப்பறை நேரங்கள், தேவதை ஆன பெண்கள், பேய்களாகிய ஆசிரியர்கள், திரையரங்குகளிலும் , விளையாட்டுத் திடலில் கழிந்த விடுமுறை நாள்கள், இதயத்தில் பறந்த வண்ணத்துப்பூச்சிகள், நண்பனிடம் ஒரே தட்டில் பகிர்ந்து உண்ட உணவு, நண்பனின் வீட்டில் போட்ட கும்மாளம், சண்டை போட்டு சேர்ந்த நட்பு, தேர்வு என்று வந்த எதிரி, ஒரே இரவில் படித்து வெற்றி பெற்ற தேர்வு முடிவுகள், தேர்வில் தோற்றாலும் சந்தோசமாகக் கொண்டாடிய நாள்கள், கண்ணீர் விட்டழுத நண்பனின் மரணம், கணத்த இதயத்துடன் கழிந்த கல்லூரியின் கடைசி நாள்கள், இறுதியில் இதயத்தில் இருந்த தோழியின் திருமணம்.... இனிமேல் கிடைக்குமா இது போன்ற வானம் இந்த பறவைகளுக்கு.....
சனி, 21 பிப்ரவரி, 2009
பள்ளிப் பருவம்
உலகில் நாமாக ஒரு அடி எடுத்துவைக்க சொல்லித் தரும் பருவம். இங்கே நண்பர்கள் உலகமானார்கள். நம் வாழ்க்கையின் திசை இங்கே தான் நிர்ணயிக்கப் படுகிறது. எட்ட முடியாததையும் எட்டிப் பிடிக்க முயலும் திமுறும், தெனாவட்டும் பிறக்கும் பருவம். மட்டை பந்தால் ஊரை சுற்றித் திரிந்தோம், பக்கத்து வீட்டு ஜன்னல்கள் உடைந்தன, கால் பந்தால் உலகை எட்டி உதைத்தோம், அதனால் எதிர் வீட்டு பாட்டியிடம் திட்டு வாங்கினோம். மீசை அரும்பியது. பக்கத்து வீட்டுப் பெண்கள் தேவதை ஆனார்கள். இன்னும் பல .......
குழந்தைப் பருவம்
பிஞ்சு மலர்களால் இந்த பூமித் தாயை சுற்றித் திரிந்த காலம் . தாய் மட்டுமே நமக்கு உலகம். பயமறியா இளங் கன்று . விநாயகன் தன் தாய் தந்தையை உலகமாகக் கருதினான். தாயின் கருவரையிலிருந்து வந்ததால், அவள் மட்டுமே உலகமாகத் தெரிந்தாள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)