கதிரவன் இன்னும் உறங்கிகொண்டிருக்கான், இவள் எழுந்து வெகு நேரம் ஆயிற்று, இந்த நகரத்தில் புள்ளி வைத்து கோலம் போட மண் தரையைக் கூட பார்க்க முடியவில்லை, ஆனால் இவள் கோலம் போட மறப்பதில்லை தினமும்....
கணவனும், குழந்தைகளும் ஆழ்ந்த உறக்கத்தில், இவர்களுக்கு காலை உணவு செய்ய இவள் தயார் நிலையில்..... பால் பெட்டலமும், செய்தித்தாளும் வீட்டின் வாசலில் இவள் கைப்பட தவம் செய்து கொண்டிரிக்கிறது....
மெல்ல விழித்தான் கதிரவன், இவளும் மற்றொரு நாள் நகரத்தின் பரபரப்பான வாழ்க்கைக்கு தாயாராகிக் கொண்டிரிந்தாள்..... கணவன் கண்விழிக்கையில் தேநீர் குவளையுடன் முன்னே நின்றாள் இவள்..... இவள் மேனியில் பட, விடிந்தது
முதல் காத்துக் கிடந்த நீருக்கு கிடைத்தது அந்த தரிசனம்...துளசி மாடம் இந்த நகரத்துப் பெண்ணின் வாழ்க்கையில் வெகு தூரம்..... கண்ணாடியின் முன்னின்று இவள் நெற்றிப் போட்டு வைத்த தருணத்தில் உலக அதிசயங்கள் அனைத்தும்
தூக்கு மாட்டிக்கொள்ள வரிசையில்.......
காலை உணவு தயாராக உணவறையில்... கணவனை அலுவலகத்திற்கும், குழந்தையைப் பள்ளிக்கும் அனுப்பி வைத்து... நடக்க ஆரம்பித்தாள் இவள் அலுவலகத்திற்கு .... தொலைவில் ஒரு மூதாட்டியின் பூக்கூடையில் சென்று நின்றது
இவளுடைய கண்...... அருகில் சென்று பத்து ரூபாய்க்கு மல்லிகை வாங்கி தலையில் வைத்து நகர்ந்தால்.. ஆனாலும் அவளுடைய கண்கள் இன்னும் அந்த பூக்கூடையில் உள்ள ரோஜா,மல்லிகையில்.....
மின்சார வண்டிக்காக நடைபாதையில் பத்து நிமிடம் நின்றாள்... அதற்குள் பத்து பதினைந்து பெண்களின் சேலைகளையும், நாகரிக உடைகளையும் , அவர்களின் நகைகளையும் நோட்டமிட்டு முடித்திருந்தது அவளுடைய கண்கள் ...... வந்து
நின்ற மின்சார வண்டியில் ஏறினாள்... கூட்டத்தின் உள்ளே கஷ்டபட்டு சென்று நின்று கொள்ள இடம் பிடித்தாள்.... அருகில் பள்ளிக் குழந்தைகள் ... வியாபாரத்திற்கு செல்லும் முதியவர்கள்... வேலைக்குச் செல்லும் பெண்களின்
தொலைக்காட்சி தொடரின் பேச்சு ... கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களின் கும்மாளம்... ஆண்களின் அரசியல் பேச்சு.... பிச்சைக்காரர்களின் பாட்டு.... இவையெல்லாம் இவளுக்கு பழகிப்போயிற்று... மின்சார வண்டி நின்றது..
இறங்கி நடந்தாள் தன் அலுவலகத்திற்கு...
தோழிகளின் காலை வணக்கமும்.. புன்முறுவலும் இவளை வரவேற்றுச் சென்றது.... தோழிகளின் அரட்டைகளின் நடுவில் அலுவலக வேலைகளும் நகர்ந்து கொண்டிரிந்தது வழக்கம் போல்..... தேனிர் இடைவேளையிலும் தொடர்ந்தது அரட்டை...
மதிய இடைவேளை வந்துவிட்டது... இன்றும் தயிர் சாதம்... பாதி மனம் இங்கே சாப்பிடுவதிலும்... பாதி மனம் குழந்தையின் மதிய இடைவேளையிலும் இருந்தது... இடை இடையே தோழிகளிடம் அரட்டை.... கொண்டுவந்ததோ கால்
வயிற்றுக்கு உணவு... ஆனால் ஒரு மணி நேரம் கண் சிமிட்டும் நேரத்தில் ஓடிவிட்டது பெண்களுக்கே உரிய அரட்டையில்.....
மறுபடியும் அதே வேண்டா வெறுப்பான வேலை.... வேறு என்ன செய்வது.. இந்த நகரத்தில் குடும்பத்தை ஓட்ட வேலைக்குப் போக வேண்டியது கட்டாயமாகி விட்டது.... எதிரில் பிடிக்காத உடன் வேலை செய்யும் ஆண் வந்தாலும்
சிரித்தாக வேண்டிய கட்டாயம் இவளுக்கு... ஆனால் மனதில் அவனை சொற்களால் ஒரு போர் செய்து கொலை செய்திருப்பாள்..... அப்படியே வேலையும் நகர்ந்தது கடிகார முள்ளும் நகர்ந்தது.... நிமிடத்திற்கு ஒரு முறை கண்கள்
கடிகாரத்தை பார்க்காமல் பார்த்து கொண்டிருந்தது....
கடிகார முள் ஐந்தை தொடவில்லை.. இவள் என்னமோ தன் குழந்தை,கணவன், இரவு சாப்பாடிற்க்கான காய்கறிகள், மின்சார வண்டியின் கூட்டம் என ஒரு பெரிய வட்ட மடித்து விட்டது.... பெண்ணிற்கே உரிய கவலை....
எல்லாவற்றையும் கடந்து வீட்டை அடைந்தாள்.... சமயலறையில் காலையில் விட்டுச்சென்ற பாத்திரங்கள் இவளை வரவேற்று நின்றது... அதை பார்த்ததும் முகத்தில் ஒரு பொன் முறுவல்... அது பெண்ணிற்கே உரிய பொறுமையின்
வெளிப்பாடு....
குழந்தை பள்ளியிலிருந்து வந்தவுடன் மனம் மறு பிறவி எடுத்த உணர்வு என்றால், கணவன் வேலையிலிருந்து திரும்பியவுடன் மனம் சற்றே வானத்தில் பறக்க ஆரம்பித்தது.. ஆனால் பறப்பதற்கு முன்னே இரவு நேர உணவைப் பற்றிய எண்ணம்
அவளை சமயலறைக்கு இழுத்துச் சென்று நிறுத்தியது...இரவு உணவு முடிந்தது... தன் பிறந்த வீட்டில் இருக்கும் போது பார்த்த தொலைக்காட்சி தொடர்.. பொற்றோரின் அரவணைப்பு... எங்கே கிடைக்கும் இவளுக்கு... இவள் இரவு
படுக்கை அறைக்குச் செல்லும் போது கடிகார முள் நடு இரவை தொட நெருங்கிக் கொண்டிருந்தது....
இப்படியே ஒவ்வொரு நாளும் கூண்டுக்குள் அடைபட்ட பட்ட பறவை போல நகர.. வார இறுதி விடுமுறை தான் விடுதலை பெற்ற மகிழ்ச்சி...
கடவுளின் படைப்பில் குறையில்லை.... சமுதாயத்தின் எழுதப்படாத சட்டமமும்.. ஆணாதிக்கமும்... நாகரிக நகர வாழ்க்கையின் கட்டாயமும்... அவளை இந்த கூட்டிற்குள் அடைத்துள்ளது.... அவள் வேலையில் சரி பாதி ஏற்று
அவளுக்கு சற்று பறக்க வாய்ப்பளியுங்களேன்....
கருவறையிலிருந்து கூக்குரலோடு இந்த உலகத்தின் மடியில் ஒரு ஜீவன் விழும்போது இந்த பயணம் ஆரம்பிக்கிறது
வெள்ளி, 29 மே, 2009
ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009
கல்லூரி வாழ்க்கை
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து ஒன்றாய் கூடிய பறவைகள் நாங்கள். எல்லைக் கோடில்லா சுதந்திரம் இங்கே இந்த வானத்தில். பாடத்தை விட வாழ்க்கையும், நட்பின் இலக்கணமும் கற்றோம் இந்த வகுப்பறை என்ற வானத்தில். குரும்புத்தனத்தின் மொத்த அடையாளம், குட்டி சுவற்றில் கழிந்த நேரங்கள், அரட்டையில் கழிந்த இரவுகள், உறக்கத்தில் கழிந்த வகுப்பறை நேரங்கள், தேவதை ஆன பெண்கள், பேய்களாகிய ஆசிரியர்கள், திரையரங்குகளிலும் , விளையாட்டுத் திடலில் கழிந்த விடுமுறை நாள்கள், இதயத்தில் பறந்த வண்ணத்துப்பூச்சிகள், நண்பனிடம் ஒரே தட்டில் பகிர்ந்து உண்ட உணவு, நண்பனின் வீட்டில் போட்ட கும்மாளம், சண்டை போட்டு சேர்ந்த நட்பு, தேர்வு என்று வந்த எதிரி, ஒரே இரவில் படித்து வெற்றி பெற்ற தேர்வு முடிவுகள், தேர்வில் தோற்றாலும் சந்தோசமாகக் கொண்டாடிய நாள்கள், கண்ணீர் விட்டழுத நண்பனின் மரணம், கணத்த இதயத்துடன் கழிந்த கல்லூரியின் கடைசி நாள்கள், இறுதியில் இதயத்தில் இருந்த தோழியின் திருமணம்.... இனிமேல் கிடைக்குமா இது போன்ற வானம் இந்த பறவைகளுக்கு.....
சனி, 21 பிப்ரவரி, 2009
பள்ளிப் பருவம்
உலகில் நாமாக ஒரு அடி எடுத்துவைக்க சொல்லித் தரும் பருவம். இங்கே நண்பர்கள் உலகமானார்கள். நம் வாழ்க்கையின் திசை இங்கே தான் நிர்ணயிக்கப் படுகிறது. எட்ட முடியாததையும் எட்டிப் பிடிக்க முயலும் திமுறும், தெனாவட்டும் பிறக்கும் பருவம். மட்டை பந்தால் ஊரை சுற்றித் திரிந்தோம், பக்கத்து வீட்டு ஜன்னல்கள் உடைந்தன, கால் பந்தால் உலகை எட்டி உதைத்தோம், அதனால் எதிர் வீட்டு பாட்டியிடம் திட்டு வாங்கினோம். மீசை அரும்பியது. பக்கத்து வீட்டுப் பெண்கள் தேவதை ஆனார்கள். இன்னும் பல .......
குழந்தைப் பருவம்
பிஞ்சு மலர்களால் இந்த பூமித் தாயை சுற்றித் திரிந்த காலம் . தாய் மட்டுமே நமக்கு உலகம். பயமறியா இளங் கன்று . விநாயகன் தன் தாய் தந்தையை உலகமாகக் கருதினான். தாயின் கருவரையிலிருந்து வந்ததால், அவள் மட்டுமே உலகமாகத் தெரிந்தாள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)